Tamil

திறமைகளை கண்டுபிடிப்பது எப்படி ?

 

ஒவ்வொருவரிடமும் பல்வேறு திறமைகள் ஒளிந்துள்ளன . அவற்றை எவையென்று தேடிக்கண்டுபிடிக்கும் போது தான் அவர்களுக்குள் புதிய மறுமலர்ச்சியை உருவாக்க முடியும் . அவர்களிடம் இருக்கும் ஒவ்வொரு விதமான ஆற்றலும் உள்ளொளியாக இருந்து பிரகாசிக்கிறது

அந்த ஆற்றலை அவரவர் சூழ்நிலை , சக்தி , அறிவு போன்ற அம்சங்களுக்கேற்ப , அவரவர் மட்டுமே வளர்த்துக் கொள்ள வேண்டும் . அதற்கு முதலில் தங்கள் இயல்பான திறமை என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள் . திறமையை மதிப்பிடும் போது நமக்குள் இருக்கும் ஆசைகள் மற்றும் கனவுகளையும் திறமை தான் என்று அதனுடன் சேர்த்துவிடக் கூடாது.

உதாரணமாக , சர்க்கஸ் , சினிமா , நாடகம் மற்றும் கலைநிகழ்ச்சிகளை பார்க்கும் போது , அதில் வரும் கதாநாயகர்களை போல நாமும் செய்து பார்க்க ஆசைபடுவதுண்டு . இந்த மாதிரி ஆசைபடும் ஒரு சிலர் வேண்டுமானால் , பிற்காலத்தில் சினிமா நட்சத்திரங்களாகலாம் . அல்லது சர்க்கஸ் வீரர்களாகலாம்.

அல்லது சந்தர்ப்பமும் , சுயமுயற்சியும் சேர்ந்து அவர்கள் விரும்பும் எதிர்காலம் அமைய உதவுகிறது . ஆனால் , சினிமா நடிகர்களாக வரவேண்டும் என ஆசைபடும் அனைவருக்குமே எதிர்காலத்தில் அவர்கள் ஆசை நிறைவேறுவது இல்லை . காரணம் , நடிப்புத்திறமை அவர்களுக்கு இயல்பான ஆற்றலாக இல்லாமல் இருப்பது தான் காரணம்.

இதே போல் பல துறைகளிலும் நமது ஆசையும் கனவும் விரிந்து . பரந்திருந்தாலும் , எதிர்காலத்தில் அவரவர் திறமை , ஆற்றலுக்கு ஏற்பதான் அவை நிறைவேறும் . அதனால் , நமது திறமையை மதிப்பிடும்போது அவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் .

உதாரணமாக , பொறியியல் துறையில் மாணவன் அடிப்படை பயிற்சிகளை பெற்று வருகிறான் . உண்மையில் அவனுக்கு அதில் ஆர்வம் இருந்தால் , அந்த ஆர்வம் பயிற்சியின் போதே தெளிவாகத் தெரிந்துவிடும் . ஒரு துறையில் சிறிதும் ஆர்வமில்லாதவர்களுக்கு அந்த துறையானது , அவர்கள் வேலைசெய்யும் போதே , தெரிந்து விடும் . அவர்களுக்கு அந்த வேலை பெரிய சுமையாகத் தோன்றும் . குறிப்பாக , எந்த துறையில் நமக்கு நீடித்த ஆர்வமும் , உற்சாகமும் தொடர்ந்து இருக்கிறதோ அதில் தான் நமது திறமை உள்ளது என்பதை உணர்ந்து அந்த வழியில் முயற்சி செய்ய வேண்டும்

திறமைக்கான தேடல்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான் இருக்க வேண்டும் . அதுவே வாழ்நாள் முழுவதும் நீடித்து விடக்கூடாது . திறமையை கண்டுபிடித்தவுடன் அதை வளர்ப்பது எப்படி என்பது குறித்த திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும் . இரண்டு முறையான பயிற்சிகளின் முலம் திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம் . அவற்றில் ஒன்று நேரடிபயிற்சி முறை . மற்றொன்று சுயமுயற்சி . நேரடி பயிற்சி முறைபடி கற்க வசதி மற்றும் வாய்ப்புகள் இல்லாதவர்கள் சுயமாக கற்றுக்கொள்ளலாம்

சித்திரமும் கைப்பழக்கம் , செந்தமிழும் நாப்பழக்கம் , கண்டதும் கற்க பண்டிதன் ஆவான் போன்ற பழமொழிகள் பயிற்சியின் அடிப்படையை நமக்குக் கற்றுத்தருகிறது . விடாபிடியாகத் தொடர்ந்து முயற்சியில் ஈடுபடும்போது எவருக்கும் எந்தக்கலையிலும் தானாகவே சரியான பயிற்சி கிடைத்துவிடும் என்பதே பழமொழிகள் உணர்த்தும் உண்மை.

About Admin

0 Comments:

Post a Comment

Powered by Blogger.