முஸ்லீம் சமூகம் இயக்கங்களை கொஞ்சம் ஒதுக்கி விட்டு இதைப் படியுங்கள். இலங்கை முஸ்லீம்களின் எதிர்காலம் குறித்து
அடுத்த சந்ததியினருக்கு நாம் எதை விட்டு செல்லப் போகிறோம் ?
சிங்கள மொழியில் படித்தது.
பத்திரிகையாளர்:சுனந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டுகின்றார்.
இங்கு சிங்கள மொழியினால் ஆன ஒரு பதிவை .சுனந்த தேசப்பிரிய அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் இதனை சேர்த்திருந்தார்கள்.
பிரியந்த அப்புஹாமி என்பவரின் பதிவை அவர் மேற்கோள்காட்டி எழுதியிருக்கின்றார்.பிரியந்த அப்புஹாமி என்பவர் இவ்வருடம் 2019 இல் சாதாரணதர பரிட்சைக்கு தோற்றவிருக்கும் தனது மகளின் வகுப்பில் நடந்த சம்பவத்தை பின்வருமாறு எழுகின்றார்.
அது வரலாற்றுப்பாட வகுப்பு.அந்த 20பேர் கொண்ட தனது மகளின் பிரத்தியேக வகுப்பில்,ஆசிரியர்,அம்மாணவர்களிடம் முஸ்லிம்களை தாக்கியது சரி என்பவர்கள் கையை உயர்த்துங்கள் என்று கேட்டு மாணவர்களின் மனநிலையை அறிய முயற்சித்திருக்கின்றார்.
18 மாணவர்கள் கையை உயர்த்தியிருக்கின்றார்கள்.இவரின் மகளும் அவரின் நண்பியும் மட்டும் கையை உயர்த்தவில்லை.நாத்தாண்டிய,கொட்டாரமுள்ள பிரதேச முஸ்லிம்கள் அண்மையில் தாக்கப்பட்டார்கள்.இவர்களை அண்டிவாழும் மாரவில,வென்னப்புவ பிரதேச மாணவர்களே இவ்வகுப்பில் கலந்துகொள்பவர்கள்.இவர்களே கையை உயர்த்தியிருக்கின்றார்கள்.
இந்த மனநிலையிலுள்ள மாணவர்கள் பெற்றோர்களாக மாறும்வயதில் எமது நாடு எப்படி இருக்கும் என்று பிரியந்த அப்புகாமியும் ,சுனந்த தேசப்பிரியவும் அங்கலாய்கின்றர்.உண்மையும் அதுதான்.எதிர்காலம் எப்படியிருக்கும் என்ற கேள்விக்கு அச்சத்தையே பதிலாக தருகின்றது.
உலமா சபைத்தலைவர் ரிஸ்வி முப்தி இன்னும் பலரும் சர்வமத நிகழ்சியொன்றில் மெழுகுவர்த்தியை ஏந்தியிருக்கின்றனர்.இன்னொரு படத்தில் முஸ்லிம் பெண்கள் வெசாக்கூடு கட்டுகின்றனர்.இன்னொரு படத்தில் வெசாக்கொடிகளினால் முஸ்லிம் இளைஞர்கள் நகரை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றனர்.இதைக்காணும்போது, இவை எல்லாமே தற்காலிகமாக எம்மை நாம் சமாதானப்படுத்திக்கொள்ள செய்யும் முயற்சியாகவே இருக்கப்போகின்றது என்பதனை நான் உணர்கின்றேன்.இதற்கு மேலுள்ள இடுகை எனக்கு உறுதுணையாகின்றது.
பல்லின சமூகத்தில்,எமது இன்றைய அச்சநிலைக்கு நாம் முஸ்லிம்கள் மட்டும்தான் பொறுப்பா? என்றால் இல்லவேயில்லை என்று அடித்துச்சொல்வேன்.
எல்லாவற்றிற்கும் பின்னால் அல்லாஹ்வின் நியதி இருக்கின்றது.ஒரு இலை விழுகின்றது என்றாலும் சரியே.ஆனால் “நீங்கள் ஒட்டகத்தைக்க்ட்டிவிட்டு அதன் பாதுகாப்பைப்பற்றி பிராத்தியுங்கள்” என்று ரசூல் (ஸல்) அவர்களின் சுன்னாவை மறந்தவர்களாக நாம் இருக்கின்றோம் என்பதனையிட்டு சிந்திக்கக்கடமைப்பட்டிருக்கின்றோம்.
பெரும்பான்மை சிங்கள மாணவர்களை நெறிப்படுத்தும்வகையில் பாடப்புத்தகங்களில் திருப்திப்படும்படியாக முஸ்லிம்களைப்பற்றி எதுவுமே இல்லை.அடியும் உதையும் அங்கே இருந்துதான் வருகின்றது.முழுக்க முழுக்க வரலாற்றுப்புத்தகங்களில் சிங்கள மக்களின் வரலாறே எழுதப்பட்டிருக்கின்றது.எனதூரில் இருக்கும் கல்லுக்கு பாடப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம்,ஒன்றாக உண்டு உறங்கி எழும் 20 இலட்சம் முஸ்லிம்களுக்கு வழங்க்கப்பட்டில்லை என்பது எனது கணிப்பாகும்.பிந்திய அரசாங்க காலத்தில் இச்சிறிய மலைக்கு போராட்டமே நடந்தது.
முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இலங்கையில் வாழ்ந்தாலும் முஸ்லிம் சமுதாயத்தின் அடிப்படைகள்,நம்பிக்கைபற்றி போதியளவு விடயம் பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட்டிருந்தால் இனங்களுகிடையே புரிந்துணர்வு ஏற்பட வாய்ப்பாயிருந்திருக்கும்.இதுபற்றி ஆராய்ந்து அரசாங்கத்திற்கு ஆலோசனை சொல்லி செயற்படுத்துமளவிற்கு தூரநோக்குடைய தேறிய அரசியல்வாதிகளோ,அரச உயர் பதவிகளில் முஸ்லிம்களோ இல்லை என்பதுதான் இதற்கான காரணமாகும்.கணித விஞ்ஞானக்கல்விகளுடன் சமூக விஞ்ஞானமும் எல்லா மாணவர்களுக்கும் கற்பிப்பதே இதற்கான தீர்வாகும்..
முஸ்லிம் என்றாலே தாடியும் தொப்பியும் ஜுப்பாவும் கூடிய ஒருவன்,வியாபாரி,
பன்றி இறைச்சி சாப்பிடான், பெண்கள் முகத்தை மூடி கருப்பு ஆடை அணிவார்கள் சட்ட விரோத போதைவஸ்துவை விற்பனை செய்பவர்கள். ஆடம்பர திருமணம். நோன்பு என்று பசியில் இருப்பதாக சொல்லி இப்தார் பார்ட்டி எனும் கோலாகல விருந்து வியாபாரத்தில் மோசடி ஆகிய பின்பங்களைத்தான் அந்நிய சமூகத்தாரிடம் கேட்டால் சொல்வார்கள்
தொப்பி அனிந்து தொழாவிட்டால் அவனை பள்ளியிலிருந்து வெளியேற்றல். 3 நாள் தப்லீக் ஜமாஅத்தில் போகாவிட்டால் பாரிய குற்றம். கடன் எடுத்தாவது கந்தூரி நடத்த சொல்லும் இன்னும் சிலர். தொழுகையில் நெஞ்சில் தக்பீர் கட்டுவதா வயிற்றில் மேல் தக்பீர் கட்டுவதா என வாய்த்தக்கம்
,தாடியின் நீளம் எப்படியிருக்கவேண்டும் என்பதைபற்றி வாதப்பிரதிவாதங்களை விட்டுவிட்டு எமது சமூகத்தின் இறுப்பிற்கும் பாதுகாப்பிற்கும்,பல்லின சமூகமொன்றில் இஸ்லாம் முஸ்லிம்களிடம் விரும்புவது என்ன என்பது பற்றி சிந்த்திப்போம்.
இலங்கை முஸ்லீம்களே அமைப்பு ரீதியாக சன்டைப் பிடிப்பதை விட்டு நாளைய நம் சந்ததியினருக்கு ஒரு அடையாளத்தை விட்டு செல்ல எல்லோரும் ஒன்று பட வேண்டும். உலமா சபையில் படித்தவர்களும் சட்டத்துறை வல்லுநர்களும் இடம் பெற வேண்டும்
இலங்கை முஸ்லீம் மமாணவர்கள் கல்வியில் பின் தங்கியவர்களாக இருக்கிறார்கள். அத்துடன் எமக்கென்று மீடியா இல்லாத குறை இவற்றிற்கு அடுத்த படி ஏறி இன்னும் பல படிகளை தாண்ட அல்லாஹ் கிருபை செய்வானாக
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Comments:
Post a Comment