உண்மையில் உங்களுக்கு மானம், மரியாதை, ரோசம், சொரனை இருக்குமாக இருந்தால்! சமூகத்தின் மீது வைத்திருந்த அக்கறை உண்மையாக இருந்திருந்தால்!!
மீண்டும் பதவியை எடுப்பதற்கு முன் உங்களால் அரசுக்கு வைக்கப்பட்ட சமூகம் சார்பான அந்த 10 அம்சம் அடங்கிய கோரிக்கைகளுக்கு அரசிடம் இருந்து உண்மைக்கு உண்மையான உத்தரவாதம் உரிய முறையில் கிடைத்து விட்டதா என்பதை பகிரங்கமாக மக்களுக்கு தெரிவித்து விட்டு அதன் பிறகு உங்கள் வயிறு நிரப்பும் அமைச்சுப் பதவிகளை எடுங்கள் பார்ப்போம்💪💪
உண்மையில் அன்று ஒற்றுமையாக சமூகத்துக்காக பதவியை தூக்கி வீசியபோது வந்த சந்தோஷத்துக்கும்.
அந்த நோக்கம் எதுவும் நடக்காமல் இப்போது வேலிபாய்ந்து வயிறு நிரப்பும் பதவியை எடுக்கவிருக்கும் செய்தியைக் கேட்டு அதைவிட அதிகமாகவே வலிக்கிறது மனது🤔🤔 அழுகிறது உள்ளம்😭😭😭
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பதை' வரைய முடியாமல் துடிக்கும்போது அறிந்து கொள்வீர்கள்.
பதவிகள் பெரிதல்ல பட்டங்கள் பெரிதல்ல கட்சிகள் பெரிதல்ல அதற்குப் போடும் கூட்டங்கள் பெரிதல்ல. சமூகத்தின் எதிர்கால இருப்பே முக்கியம் அதுவே மக்களின் நின்மதி.
ஒலுவில் ஜெலில்.
0 Comments:
Post a Comment