Tamil

Fox in politics and Gentleman in politics.

அரசியல் நரி ஜே.ஆர்.யின் Gentleman Politics உம் - Gentleman Politics ரணிலின் அரசியல் நரித்தனமும்.


முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கும் ஏராளமான தடைகளை தாண்ட வேண்டி இருந்தது. அவருக்கு போட்டியாக கட்சிக்குள் லலித் அத்துலத்முதலி, காமினி திசாநாயக, ரணில் விக்ரமசிங்க (இன்றையவரே) போன்றவர்கள் இருந்தார்கள். இன்று ரணில் செய்வது போன்று அன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராகவும் ஜனாதிபதியாகவும் இருந்த ஜே.ஆர். ஜயவர்த்தனவும் இவர்களுக்கிடையில் போட்டியை தீவிரப்படுத்தி இருந்தார்.


பிரேமதாச உட்பட இவர்கள் நான்கு பேரும் அமைச்சரவை அமைச்சர்களாக இருந்தார்கள். இதனால், ஜனாதிபதி தேர்தலை நோக்காக கொண்டு நாடுபூராகவும் தமது அதரவுத்தளத்தை உண்டாக்க ஆளுக்கொரு நிகழ்ச்சித்திட்டத்தை உண்டாக்கினர். அந்தவகையில்
👉🏿 பிரேமதாச - "கம் உதாவ"
👉🏿 காமினி - "சுவர்ண பூமி"
👉🏿 லலித் - "மஹாபொல"
👉🏿 ரணில் - "யவுன்புர"
என ஆளுக்கொரு வேலைத்திட்டத்தை நாடுபூராகவும் பரந்தளவில் செயற்படுத்தினர்.


இந்நிலையில் 1988 ஆம் ஆண்டு டிசம்பரில், ஒரு ஜனாதிபதி தேர்தலில் யாரை வேட்பாளராக அறிவிப்பது என்பதில் பெரும் இழுபறி நிலையே ஏற்பட்டது. குறிப்பாக அப்போதைய பிரதமராக இருந்த பிரேமதாசவை வேட்பாளராக்குவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தி நின்றது. ஏன்எனில், இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்தவர்களில் பிரேமதாச முக்கியமானவர். எனவே, இவரை பெயரிட விடாமல் இந்தியா பெரும் அழுத்தம் கொடுத்தது.


அத்தோடு பிரேமதாசவிற்கு எதிராக "சாதி" மேலான்மைவாதமும் கட்சிக்குள் தலைவிரித்தாடி பெரும் எதிர்ப்பும் கட்சி உடைவை சந்திக்கும் அபாயமும் இருந்தது. இந்நிலையில், ஜே.ஆர். ஜயவர்த்தனவே யாப்பில் திருத்தத்தை மேற்கொண்டு (இரண்டு முறை மட்டும் போட்டியிட முடியும் என்பதை நீக்கி) மிண்டும் தேர்தலில் குதிப்பதைப் பற்றி யோசிக்கின்ற நிலை ஏற்பட்டது.


இவ்வாறான நிலையில், அன்று ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளராக (Chairman) இருந்த முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்ஜன் விஜேரட்ன இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் கோதாவில் இறங்கினார். அவருக்கு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிற்கும் எதிர்பார்ப்பு இருக்கவில்லை. அதனால், இதயசுத்தியோடு இயங்கினார். அவர் வெற்றிவாய்ப்பை அலசினார். அதற்கான தரவுகள் தகவல்களை ஆராய்ந்தார்.


அவருடைய தேடலின் முடிவு - அன்றைய தேர்தலில் சிறிய வாக்கு வித்தியாசத்திலேயே ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிபெறுமெனவும் - அதுவும் பிரேமதாச களமிறக்கப்பட்டால் மாத்திரமே சாத்தியம் என்பதாகவும் அமைந்தது. அம்முடிவோடு ஜே.ஆர். ஜயவர்த்தனவை சந்தித்தார். உண்மைகளை விளக்கினார். அந்நேரம் ஜே.ஆர். ஜயவர்த்தன 82 வயதை அடைந்திருந்த நிலையில், அவருடைய குடும்பம் அவரை அரசியல் இருந்து ஓய்வுபெறுமாறு கூறியிருந்தது.


இந்த இரண்டையும் கவனத்தில் கொண்ட ஜே.ஆர். ஜயவர்த்தன பிரேமதாசவையே வேட்பாளராக்க முடிவெடுத்தார். அந்த முடிவை ரஞ்ஜன் விஜேரட்னவுடன் சேர்ந்து மிகக்கவனமாக நடைமுறைப்படுத்தினார். இருவரும் தமக்குள் மாத்திரம் இந்த விடயத்தை வைத்துக்கொண்டு முதலில் ரணிலை அழைத்து பேசினர். ரணிலுக்கு இன்னும் வயதிருக்கிறது எனவும், நீண்ட எதிர்காலம் காத்திருக்கிறது எனவும் கூறி அவரை போட்டியிலிருந்து விலகவைத்தனர். அதற்கு ரணிலுக்கும் ஜே.ஆர். ஜயவர்த்தனவுக்குமிடையில் இருந்த உறவு முறை பெரிதும் உதவியதாக அறிய முடிகிறது.


பின்னர், லலித்தை வேறாகவும், காமினியை வேறாகவும் அழைத்து பேசினர். எதிர்கால தேர்தலின் போக்கை விளங்ப்படுத்தினர். அதன் முடிவுகள் பிரேமதாச இல்லாமல் போனால் எப்படி அமையும் என்பதை விளங்கப்படுத்தினர். கட்சி தோல்வி கண்டால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை விபரமாக கூறி சம்மதம் பெற்றனர். பின்னர், அடுத்து நடந்த பொதுச்சபை கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளராக பிரேமதாசவை ஜே.ஆர். ஜயவர்த்தனவே முன்மொழிந்தார் (Propose). அதனை கூட்டாக லலித்தும் காமினியும் ஆமோதித்தனர் (Second). அதன்பிரகாரம் பிரேமதாச வேட்பாளரானார்.


அன்றைய தேர்தல் முடிவுகள் ரஞ்ஜன் விஜேரட்ன எதிர்வு கூறியதை போன்றே அமைந்தன. பிரேமதாசவிற்கு 2,569,199 (50.43) - ஶ்ரீமாவோ பண்டாரநாயகவிற்கு 2,289,860 (44.93). பிரேமதாசவை களமிறக்க பங்களிப்பு செய்த ரஞ்ஜன் விஜேரட்னவை இத்தேர்தலின் பின்னர் பலரும் மெச்சினர். அவரின் இதயபூர்வ முயற்சியின் வெற்றியே இந்த வெற்றி என பகிரங்கமாக வாழ்த்தினர்.


அதே சூழ்நிலையே இன்றும் வந்திருக்கிறது;
👉🏿 அன்று பிரேமதாச இருந்த இடத்தில் இன்று சஜித் பிரேமதாச
👉🏿 அன்று ஜே.ஆர். ஜயவர்த்தன தலைவராக இருந்த இடத்தில் இன்று ரணில்
👉🏿 அன்று ரஞ்ஜன் விஜேரட்ன தவிசாளராக இருந்த இடத்தில் இன்று கபீர் ஹாசிம்
👉🏿 அன்று லலித், காமினி, ரணில் இருந்த இடத்தில் இன்று கரு, ரணில்
👉🏿 அன்று ஶ்ரீமா இன்று கோட்டாபே ராஜபக்‌ஷ


இப்போதுள்ள கேள்விகள் என்னவெனில்;


அன்று தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்பதை மனதில் கொண்டு தவிசாளர் ரஞ்ஜன் விஜேரட்ன கூறியவற்றை - தலைவர் ஜே.ஆர். ஜயவர்த்தன செவிமடுத்தார். பிரேமதாசவை வேட்பாளராக்கினார்.


👉🏿 இன்று தலைவராக இருக்கும் ரணில் தனது மாமாவின் வழியில் (JR) தவிசாளர் கபீர் ஹாசிமின் நியாயங்களை கருத்திற்கொண்டு சஜீத்தை வேட்பாளராக்குவாரா?


அன்று ரணிலின் மாமா JR, பிரேமதாசவிற்கு போட்டியானவர்களை அழைத்து வாபஸ் பெற வைத்தார்.


👉🏿 இன்று தானே வாபஸ் பெறும் முடிவிற்கு வருவாரா?
👉🏿 மற்றுமொரு போட்டியாளரான கரு ஜயசூரியாவை அழைத்து வாபஸ் பெற வைப்பாரா?


அன்று ரணிலின் மாமா JR, பிரேமதாசவின் பேரை தானே முன்மொழிந்து, போட்டியாளர்களுக்கிடையே உறவை வலுப்படுத்தும் பொருட்டு, காமினியையும் லலித்தையும் ஆமோதிக்க வைத்து முன்மாதிரியை காட்டினார்


👉🏿 ரணில் தானே சஜீத்தை முன்மொழிந்து போட்டியாளரான கருவை ஆமோதிக்க வைத்து முன்மாதிரியை காட்டுவாரா?


இந்த வரலாற்றுக்கேள்விகளுக்கு எப்போது தகுந்த பதில்கள் கிடைக்கும்? ஜே.ஆர். ஜயவர்த்தனவை Fox in Politics என்பார்கள். ரணிலின் அரசியலை Gentleman politics என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட ஜே.ஆர் முன்மாதிரிகளை காட்டியுள்ளார். Gentleman politics செய்யும் ரணில் என்ன செய்யப்போகிறார் என்பதுதான் thousands dollars கேள்வி?


பொறுத்துத்தான் பார்ப்போமே


ஏ.எல்.தவம்
முன்னாள் மாகாண சபை உறுப்பினர்

About Admin

6 Comments:

 1. I seriously love your blog.. Excellent colors & theme. Did you develop this site
  yourself? Please reply back as I'm hoping to create my own personal website and would like to find out where you
  got this from or just what the theme is named. Cheers! http://50.116.50.64/index.php/Your_First_Journey_Overseas_On_International_Business

  ReplyDelete
 2. Great goods from you, man. I have have in mind your stuff previous to and you are just too
  fantastic. I actually like what you've obtained here,
  certainly like what you're stating and the
  way in which during which you assert it. You're making it entertaining and you still take care of to keep it smart.

  I can not wait to read far more from you. This is
  really a terrific site.

  ReplyDelete
 3. "Sometimes giving simply your schedule can definitely generate another person smile," іn ⅼine with the website.

  There are simplle systems iit is possible to executed that may
  help you givee attention to your company. At the minute, probably the mosst popular types of general
  marketing utіlіsed by internet advertising companies is termed articke maгketing.

  ReplyDelete
 4. Ϝantastic goods from you, man. I have underѕtand you stuff previous to
  and you're just extremely greɑt. I actuaⅼly lіke wwhat you have
  acquired here, certainly like what yоu are stating and the way
  in which you say it. You make it enjоyable and you still take caгe οf tto keep it wise.
  I can not waіt to rad far more from you. This is reaally a wonderful website. http://www.oxdeal.pk/author/yukikoputil/

  ReplyDelete
 5. If you will get Mɑster Resell rіghts, you will be abⅼe to trade the application, e-boⲟk or PDF file, in some instance videso ѕerries also ffor the investment you
  chօoѕe, or perhaps provide it with away to уour
  subscribers. We did a project for a mortgage company in United States; and even the
  wⲟrd "mortgage" is translated in 3 ѡays in Chinese, that may be confusing.
  Keeping a record of how customers view your organization,
  and reacting too it over time, is oftentimes not enough.

  ReplyDelete
 6. I'd like to thank yoᥙ for the efforts you've ρut in writing this site.

  I am hoping to view the sаme high-grade content bƅy you later on as
  ᴡell. In truth, y᧐ur creative writing abilities
  hаs encouraged me to get myy own, personal blog now ;) http://www.consiglisulpeso.it/entry.php?110923-aturan-poker-idnplay-yang-resmi-saat-ini

  ReplyDelete

Powered by Blogger.