ஜும்மா குறித்து சிங்கள மக்களின் கவலை.
மிம்பர்களில் ஆக்ரோசம் காட்டும் உலமாக்களுக்கு இது புரியுமா..?
குத்துபாக்கள் உள்ளங்களை தொடட்டும்...
நேற்று முன்தினம் 30.08.2019 வெல்லம்பிட்டி பொல்வத்தை ஜும்மாப் பிரசங்கம் சிங்கள மொழியில் நடைபெற்றது.
இதன் போது மாகாண சபை உறுப்பினர் கமல் ஜயகொடி உட்பட வெல்லம்பிட்டி பொலிஸ் ஓ.ஐ.சி மற்றும் சிலர் அழைக்கப்பட்டிருந்தனர். ஏற்பாடு மாநகர சபை உறுப்பினர் அல்ஹாஜ் இர்ஃபான் செய்திருந்தார்.
ஜும்மா விற்கும் பிறகு பேசிய மாகாண சபை உறுப்பினர் கூறிய கருத்தில் முக்கியமானதும் சிந்தித்து எமது உலமாக்கள் அவசரமாக சீர்திருத்த வேண்டிய விடயம் :-
அந்த மாகாண சபை உறுப்பினர் கூறினார்-
"பிரசங்கங்கள் தமிழில் இருப்பதனால் எமக்கு ஒன்றும் புரிவதில்லை.
அதனால்
பிரசங்கம் அனேகமாக ஆக்ரோசமாக, ஆவேசமாக, கோபமாக
கேட்பதால் அது பள்ளிகளில் ஆவேசத்தையும் வெறுப்புணர்வையும் போதிப்பதாகவே நமது மக்கள் நினைக்கின்றனர்.
இன்று நமது சிங்கள மொழியில் நிகழ்த்தப்பட்டதனால் தான் புரிகிறது எமது எண்ணம் தவறு என்பது....."
இதில் ஒன்றும் எமது கொள்கை உலமாக்களும் விதிவிலக்கல்ல. நாம் இங்கு எல்லா உலமாக்களையும் சொல்லவில்லை. அழகிய முறையில் உள்ளத்தை தொடக்கூடிய, உள்ளத்தை சொல்லக்கூடிய உலமாக்களும் இல்லாமலில்லை. ஆனால் சிலர் மைக்ரோ போனுக்கே சப்தத்தை சொல்லிக் கொடுப்பவர்கள் போல பயான்களை அமைத்துக் கொள்கின்றனர். இந்த உரைகள் நாலு பேரைக் கிழிப்பதற்காக அன்றி நாலு விடயத்தை நல்லவிதத்தில் உள்ளவர்களுக்கு புரிய வைப்பதற்காக இருந்தால் ஏன் இவ்வளவு கத்தவேண்டும்.
இன்று கொள்கை உலமாக்களின் கருத்துக்களை சில மக்கள் விமர்சிப்பதற்கும் இந்த வகையான பயான்கள் காரணமாகாமல் இல்லை. குர்ஆன் சுன்னா என்று எல்லாவற்றுக்கும் பேசும் நாம் ரசூலுல்லாஹ்வின் அழைப்புப்பணி இந்தளவு காரசாரமாக இருந்ததா என்பதையும் பார்க்கக் கூடாதா?
குத்துபாக்கள் உள்ளங்களை தொடட்டும்...
0 Comments:
Post a Comment