Tamil

UNP க்கு கடைக்கு செல்கின்றவர்களுக்கு......

 

" கோட்டா ( மஹிந்த கூட்டனி ) வெத்திடுவான் அதனால சஜித்துக்கு வோட்டுப் போடுவோம் , JVP க்கு வேண்டாம் " என்று சொல்லும் லொஜிக் எனக்கு உண்மையிலேயே

விலங்குதில்லை !

சிறுபான்மையினரின் ஓட்டுக்களில் முழுக்க முழுக்க தங்கியிருக்கும் UNP கட்சியினர் , சிறுபான்மையினர் தாக்கப்படும் போது " கூந்தல் பரித்துக் கொண்டா " இருந்தார்கள் !

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் நடக்கும் போது பாதுகாப்பு அமைச்சர் அனுர திசாநாயக - JVP யா ? அல்லது ரணில் விக்ரமசிங்க - UNP யா ?

அம்பாரை,காலி,கிங்தோட்டை,கண்டி,திகன,மினுவாங்கொட,வடமேல்மாகாணம் தாக்கப்படும் போது , அதிகாரம் இருந்தும் அதை தடுக்காமல் கைகட்டி கண்டும் காணாமல் இருந்தபோது நாட்டை ஆட்சி செய்தது JVP கட்சியினரா ?

குண்டு வெடிப்புக்களுக்கு எவ்விதத்திலும் சம்பந்தமே இல்லாத
" நிகாப் , அரபு எழுத்திலான பதாதைகள் " தடை செய்து முஸ்லிம்களின் ஓட்டுக்களைப் பெற்று முஸ்லிம்களுக்கே முதுகில் குத்தியது JVP யினரா ?

முஸ்லிம்களுக்கு நடக்கும் எந்தவொரு அநியாயங்களுக்கும் எப்போதுமே குரல் கொடுக்காத சஜித்பிரேமதாச , முஸ்லிம் இளைஞர்கள் சிலர் பௌத்தர்களின் புனித இடங்களில் நின்று போட்டோ பிடித்தபோது எப்படி முஸ்லிம்களுக்கு எதிராக கொதித்து எழும்பினார் என்பது நினைவில் இல்லையா ?
இந்த சஜித்துக்காகவா நாம் எமது வாக்குகளை தானம் பன்ன வேண்டும் ?

ஒரே ஒருமுறை அலுத்கம தாக்கப்பட்ட போது மஹிந்தவை முற்று முழுதாக ஓரம் கட்டிய நாம் ,

வந்ததிலிருந்தே தொடராக முஸ்லிம்களை தாக்குவதற்கு அனுமதி " அளித்துக் கொண்டிருக்கும் #UNP க்கு ஏன் நாம் எமது பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும் ?

நமக்கு சூடு சொறனை இல்லையா ?
இந்த சந்தர்ப்பத்திலேயாவது எமது எதிர்ப்புக்களை நாம் வாக்குகளை கொண்டு தெரிவிக்காவிட்டால் எப்போது நாம் தெரிவிப்பது ?

முஸ்லிம்கள் JVP_யினருக்கு வாக்களிக்கவேண்டும் " என்று எந்த முஸ்லிம் அரசியல்வாதியும் சொல்லாத போதும்...
சுயமாக எவ்வாறு அன்று மஹிந்தவுக் கெதிராக வாக்களிக்க "உள்ளுனர்வு " சொன்னதோ அவ்வாறே இன்று அநியாயத்துக்குள்ளான முஸ்லிம்களின் " உள்ளுனர்வு " UNP_க்கு எதிராக வாக்களிக்க_சொல்கிறது " என்பதை தயவு செய்து
புரிந்து கொள்ளுங்கள் !

முழுக்க முழுக்க சிங்கள மக்களின் ஓட்டுக்களில் தங்கியிருக்கும் JVP யினர் முஸ்லிம்களுக்கு நடக்கும் அநியாயங்களுக்கு எதிராக பேசுவதைவிட ,
தார்மீக ரீதியில் முஸ்லிம்களின் 80-90% ம் ஓட்டுக்களில் தங்கியிருக்கும் UNP யே முஸ்லிம்களுக்காக போராடியிருக்க வேண்டும் .

துரதிஸ்டவசமாக UNP யே முஸ்லிம்களின்
" உயிர் , உடமை , உரிமை , மானம் " என்பன துவம்சம்பன்ன காரணமாக இருக்கிறது !

இனியும் நாம் எங்களுக்கு அநியாயம் செய்யும் UNP யை_காப்பாற்றுவதா ?
அல்லது
எங்களுக்காக குரல்கொடுக்கும் JVP யை வளர்த்தெடுப்பதா ?

About Admin

1 Comments:

Powered by Blogger.