பேரச்சத்தால் பீடிக்கப்பட்டு பன்சலைகளில் சிரமதானம் செய்கிறோம்...
வீடுகள் வாகனங்களெங்கும் சிங்கக் கொடியைப் பறக்க விட்டிருக்கிறோம்..
நாம் பெருமை மிக்க இலங்கையர் என்று மார் தட்டிக் கொள்கிறோம்.
இனநல்லிணக்கம் பற்றி பயான்களும் நிகழ்ச்சிகளும் மூலை முடுக்குகளெங்கும் கனல் பறக்கின்றன...
பெரும்பான்மை மீதான பேரச்சம் எம்மை குலை நடுங்க வைத்திருக்கிறது. அச்சத்தின் விளைவே இந்தச் செயல்கள்.
நாம் கோழைகளாகி விட்டிருக்கிறோம்.
" நாங்கள் அரேபிய ஒட்டகங்கள் அல்ல இலங்கைச் சிங்கங்கள்" என்றொரு மத்ரஸா மாணவர்கள் சுதந்திர தினம் கொண்டாடுகிறார்கள்.
எஜமானனின் விசுவாசத்தைப் பெற்றுக் கொள்ளத் தடுமாறும் எளிய பணியாளனின் பதட்டம் எமது எல்லாச் செயல்களிலும் பிரதிபலிக்கின்றது.
இயல்பாக வர வேண்டிய இனநல்லிணக்கம் வேறு; நாம் நடிப்பது வேறு.
இன நல்லிணக்கம் என்பது ஒரு இனம் அடக்கியாள்வதும் இன்னொரு இனம் அடங்கிப் போவதுமல்ல.
அது இருவழிப்பாதை.
அடிமைத்தனத்தைக் கொண்டாடும் இந்த சுதந்திர தினம் எம் கொண்டாட்டத்துக்குரியதல்ல.
ஷமீலா யூசுப் அலி
உபரிக் குறிப்பு
ஒட்டகம் எனக்கு சிங்கத்தை விட மிகப்பிடிக்கும்
0 Comments:
Post a Comment