Articles

ஒரு ஆண் செய்த கேவலம்.!!

இப்படியும் சில கேடு கெட்ட பிரவிகள்.

பர்ஹானா ஒரு விவாகரத்து செய்யப்பட்ட 25 வயதுப் பெண். அவள் மனதின் காயங்களை ஆற்றி மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கைக்குள் புகுத்திட வேண்டும் என்பதில் அக்கறையாக இருந்தவர்களில் பாத்திமாவும் ஒருத்தி.

அன்றும் அப்படித்தான் அவளுக்காக இணையத்தில் உள்ள திருமண பக்கம் ஒன்றில் மாப்பிள்ளை தேடும்.போது, அங்கு கண்ட திருமண விளம்பரம் ஒன்று தன் தோழிக்கு பொருந்தும் என நினைத்தவள், முன் பின் யோசனை செய்யாது தன் தோழியின் வாழ்க்கை மீதிருந்த அக்கறை காரணமாக அறிமுகம் அற்ற அந்த இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.

மறுமுனையில் திருமணம் செய்ய காத்திருக்கும் அந்த நபரின் வீட்டில் இருந்து ஒருவர் கதைக்க, தான் விளம்பரத்தை பார்த்து விட்டு கதைப்பதாகவும், குறித்த விளம்பரத்தில் உள்ள நபருக்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட்டதா? எனக் கேட்டு விட்டு,

தான் தன் தோழியின் விடயமாகவே தொடர்பு கொண்டதாகவும், இன்று/ நாளை மாலை அவர்கள் உங்களோடு கதைப்பார்கள் எனக் கூறி விட்டு தொடர்பை துண்டித்தாள் பாத்திமா.

மறு நாள் காலை 11 மணியளவில் புதிய தொலைபேசி இலக்கம் ஒன்றில் இருந்து ஆயிஷா விற்கு அழைப்பு ஒன்று வந்தது, தெரியாத இலக்கமாதாலால் முதலில் அழைப்பினை எடுக்காமல் இருந்தாலும், தொடர்ந்தும் போன் ரிங் ஆகவே அதனை எடுத்தாள்.

மறுமுனையில் ஒரு ஆணுடைய குரல்,

#"ஹாய் அஸ்ஸலாமு அலைக்கும், நேத்து கோல் எடுத்து கல்யாண விசயமாக பேசி இருந்தீங்க, நீங்க தானே அந்தக் கல்யாணப் பொண்ணு,

# அது நான் இல்லை, ஏண்ட நண்பி...

#பொய் சொல்ல வேண்டாம் வேறு பெயரில் கதைத்தது நீங்க தானே, எனக்கு தெரியும் அது நீங்கள் தான் என்று " என் அவன் பாட்டிற்கு கதை அளக்க,

அவனது பேச்சை இடை மறித்த ஆயிஷா,
அது நான் கிடையாது, எனக்கு திருமணம் ஆகி பிள்ளையும் உண்டு என்று கூறியும் அவன் விடுகிற பாடில்லாததால், .

அவனிடம்
"இங்க பாருங்கள் நான் திருமணம் செய்து நிம்மதியாக வாழ்கிறேன், நம்பிக்கை இல்லை என்றால் எனது முக நூல் கணக்கை வேண்டுமானாலும் பாருங்கள்" என தனது பெயரையும், முக நூல் கணக்கின் விபரத்தையும் முட்டாள் தனமாக இவனிடம் கொடுத்து விட்டு அவனது நம்பரை ப்லோக் செய்து விட்டாள்.

உலகின் கேவலமான பக்கங்களையும், சூதுவாதையும் அறியாத அந்த அபலை பெண் இத்தோடு தொல்லை முடிந்து விட்டது என்று நிம்மதிப் பெறு மூச்சுடன் அன்றைய நாளைக் கடந்தும் விட்டாள்.

மறுநாள் இரவு 11மணியளவில்,
அவளது போனிற்கு தெரியாத இலக்கம் ஒன்றில் இருந்து ஒரு மேசேஜ் வந்தது. அதைப்பார்த்த ஆயிஷா அதிர்ச்சி யின் உச்சத்திற்கே சென்று விட்டாள், ஆம்

அதில்,
ஆயிஷாவின் முக நூல் பக்கத்தில் இருந்த அவளது கணவனின் புகைப்படத்தை போட்டு,

" இவன் தான் என் கணவன், இவன் எனக்கு செய்யாத அநியாயம் கிடையாது, இப்போ வெளி நாடு போய் இருக்கிறான், வீட்டில் யாரும் இல்லாத நேரம் சொல்கிறேன் கட்டாயம் நீ வர வேண்டும்"

" இது என் பிள்ளை இவனுக்காக தான் நான் உசுரே வாழ்கிறேன்" என்று தன் பிள்ளையின் புகைப்படத்தையும் போட்டு,
இன்னும் பல ஆபாசமான chat (செட்) களை ஆயிஷா
முந்தைய நாள் அவள் Block செய்த தொலைபேசி இலக்கத்திற்கு செய்ததைப் போன்று எடிட் செய்து அனுப்பி விட்டு,

இப்பொழு நீ என்ன சொல்கிறாய்,
என்னுடன் இருக்கத் தயாரா? இல்லையா? நான் செல்வதைப் போல் கேட்கப் போகின்றாயா இல்லையா? என்று மிரட்டல்கள் வேறு கொடுத்து மெசேஜ் அனுப்பி இருந்தான்.

இதைப் பார்த்த மறு கணமே அவனுக்கு மெசேஜ் இல் மருவாதியாகவும், மருவாதி கெட்ட விதத்திலும் கூறிப்பார்த்தும் அவனின் அட்டகாசம் அதிகமாகியதே தவிற அடங்கிய பாடில்லை.

என்றும் புத்தியுடனும், நிதானமாக செயல் படும் ஆயிஷா அன்று முதல் தடவையாக அறிமுகம் அற்ற இலக்கர்திற்கு கதைத்தது, தன் முக நூல் விபரத்தை கூறியது என அடுத்து அடுத்து செய்த பிழைகளை எண்ணி வருந்தினாள்,

எதையும் தன் கணவனிடம் மறைக்காத குணம் கொண்ட ஆயிஷா, தன் மனைவியை சந்தேகம் கொள்ளாத அவளது கணவனிடம் இரவோடு இரவாக நடந்ததை கோல் செய்து அழுகையுடன் கூறி முடித்தாள்.

மனைவியைப் பற்றி புரிந்துணர்வுடன் வாழ்வதால் அவளுக்கு ஆறுதல் கூறி, ஏசி ஒருவாறு அவளது அழுகையை நிறுத்தி, சமாதானம் செய்து விட்டு, மனைவியின் சகோதரன் மூலம் தொலைபேசி அழைப்பு எடுக்கும் நபருக்கு எச்சரிக்கை செய்து அவனது ஆட்டத்தினை அடக்கிவிட்டனர்.

சில மாதம் சென்று ஆயிஷாவின் கணவன் வெளி நாட்டில் இருந்து வந்திருந்த வேளை, அவனது மெசெஞ்ர் இன் பாக்ஸ் இனை ஆயிஷா எதேச்சையாக பார்க்க,

அங்கும் தனக்கு அனுப்பியதைப் போலவே தன் முக நூலில் இருந்து எடுத்த புகைப்படங்களை இனைத்து , தன்னைப் பற்றி போலியாக ஜோடித்தும், அசிங்கம் அசிங்கமாகவும் எடிட் செய்யப்பட்ட chat புகைப்படங்கள் 4,5 இருப்பதைக் கண்டு அதிர்ந்துவிட்டாள்,

இது பற்றி ஒரு வார்த்தை தன்னிடம் விசாரிக்காத தன் கணவனின் நம்பிக்கையை நினைத்து கண்ணீர் சிந்தியபடி இறைவனுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டாள் அவள்.

சிந்திக்கவும்.
இது போன்ற கயவர்களின் நோக்கம் தான் என்ன?

இவர்கள் உண்மையில் திருமணம் செய்யும் நோக்கில் உள்ளனரா? அல்லது விவாகரத்து செய்யப்பட்ட / நீண்ட காலம் திருமணம் ஆகாத அல்லது கணவன் வெளி நாட்டில் வாழும் பெண்களை எதாவது ஒரு விதத்தில் அடைந்து கொள்ள அல்லது அவர்களை ஏமாற்றி பணம் நகைகளை பறிக்க திட்டம் போடுபவர்களா?

கல்யாணம் என்று கூறி விட்டு ஒரு பெண்ணின் இலக்கத்தை நேரடியாக தொடர்பு கொண்டு தகாத உறவிற்கு அழைப்பதும்,
மிரட்டுவதும், நோக்கம் நிறைவேறாத பட்சத்தில்,

அவளது கணவனையும் இவளையும்.பிரித்து விட திட்டமிட்டு செயல்படும் இவர்கள் நோக்கம் என்ன?

திருமணம் செய்ய இது போன்று கொடுக்கப்படும் விளம்பரங்களில் மிகவும் அவதானமாக இருந்திடுங்கள். இது போன்ற கீழ்தரமான மனிதர்களிடம் உங்கள் பிள்ளைகள் வாழ்க்கை சீரழிந்து விடக் கூடாதல்லவா.

படிப்பினை,

சகோதரிகளே
நலவோ, கெடுதியோ உங்கள் தொலைபேசி இலக்கங்கள் / உங்கள் போனில் இருந்து அசவசரத்திற்கு சரி தெரியாத ஒருவருக்கு அழைப்பை எடுத்து கொடுத்தல் போன்ற வேலைகளை செய்யாதீர்கள்.

அதே போல் சமூக வலைதள முகவரிகளை அறிமுகம் அற்றோருக்குக் கொடுத்தல்/ தெரியாதோருடன் செட் செய்தல் மற்றும் அவர்களை இனைத்தல் போன்ற விடயங்களை செய்யாதீர்கள்.

உங்கள் புகைப்படங்கள், குடும்பப் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதியும் போது, இது போன்ற சிக்கல்களை எதிர் கொள்ள கூடிய சாத்தியங்கள் உண்டு என்பதையும் நினைவில் வைத்திடுங்கள்.

கணனி தொழில் நுட்பங்களை ஓரளவேனும் அறிந்திடாத, மனைவியை சந்தேகிக்கும் ஒரு நபரின் கைகளில் இது போன்ற போலி chat - screen shots ( செட் ஸ்க்ரீன் ஷாட்) சென்றடைந்தாலோ/உங்கள் நட்பு வட்டத்தில் இருப்பவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டாலோ/ சமூக வலைதளத்தில் அவற்றினை பரப்பி விட்டாலோ உங்கள் நிலை என்ன ஆகும்?

குற்றம் செய்யாமல் பலியை சுமந்து தண்டனையை அனுபவித்து மன அழுத்தத்திற்கு ஆளாகி வாழ்க்கை நாடமாகிவிடும் அல்லவா.

நாம் சரியானவர்களாக இருந்தாலும் இது போன்ற பிறப்பு பிழையான ஜென்மங்களால் வாழ்க்கை பாலாகிவிடமல் இருக்க அவதானமாக செயல்பட்டிடுங்கள்.

எமது இன்பக்ஸ் இற்கு வந்த அனுபவப் பதிவுகளில் ஒன்று.
அனுப்பி வைத்தவர்,
Miss.BN.

சமூக நலனைக் கருத்தில் கொண்டு இவற்றை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதை உங்கள் பொறுப்பாக விட்டு,
இன்ஷா அல்லாஹ் இது போன்ற விடயங்களை இனி வரும் காலங்களிலும் பகிர்வோம்.

life of a perfect muslim.

About Admin

0 Comments:

Post a Comment

Powered by Blogger.