Breaking News

தோற்கடிக்கப்பட வேண்டிய சம்பிக்கவின் இனவாத இலக்கு.

இலங்கையில் இனவாத ஊக்குவிப்பாளர்களில் முக்கியமானவரான பாட்டலி சம்பிக்க ரணவக்க பற்றிய பதிவே இதுவாகும்

#அறிமுகம்

இலங்கையில் காலத்திற்கு காலம் இனவாதிகளின் செயற்பாடுகள் இருந்து வந்துள்ளன, அது சிறுபான்மைச் சமூகங்களை இலக்கு வைத்தே மேற்கொள்ளப்படுகின்றது, அதில் "அரசியல் இனவாதிகள்" இருப்பினும் , இன்னும் சிலர் புத்திஜீவித்துவமான முறையில் இனவாதத்தை எதிர்கால தலைமுறையினருக்கு எடுத்துச் செல்கின்றனர், அந்த வகையில் மிக முக்கியமான ஒருவரைப் பற்றிய பதிவே இதுவாகும்.

#யார்இந்தசம்பிக்க..

சம்பிக்க ரணவக்க ஹொரண புளத் சிங்கள பிரதேசத்தில் சேர்ந்த, மொறட்டுவ பல்கலைக்கழக Electrical பொறியியலாளர்.
ஆரம்ப காலங்களில் JVP யின் முன்னணி உறுப்பினராகவும், பின்னர் Jathika Mithururayo என்ற அமைப்பை உருவாக்கியவர்.,பின்னர் அடிப்படைவாத அமைப்பான சிஹல உறுமய அமைப்பின் முக்கிய அரசியல் செயற்பாட்டாளர். பாராளுமன்ற உறுப்பினர்,

#இனவாதசிறப்புத்தன்மை

அரசியலில் விமல், கம்மன்பில ரத்தன ஹிமி, போன்ற பலர் காலத்திற்கு காலம் இனவாத அரசியல் கருத்துக்களைத் தெரிவித்தாலும், அதனை பின்னர் மறந்து விடுவர், ஆனால் சம்பிக்க அவ்வாறு அல்ல சிறுபான்மைக்கு எதிரான ,இனவாதத்தை ஒரு "அறிவியலாக"இலங்கைச் சமூகத்தில் முன்வைக்கின்ற மிக நுட்பமானவர், மட.டுமல்ல, மேற்கூறிய சிறிய இனவாத அரசியல் செயற்பாட்டாளர்களை உருவாக்கியவர் இவரே, ஏனையவர்கள் இவரது வளர்ப்பு குட்டிகளே

#எதிர்காலஇலக்கும்செயற்பாடும்

சம்பிக்கவின் இலக்கு இலங்கையின் ஜனாதிபதியாக வருவது, அதற்கான தனது செயற்பாட்டை ஆரம்பித்து மிக வெற்றிகரமாகப் பயணிக்கின்றார் ,அதற்கான மிக பொருத்தமான அரசியல் வழிமுறைகளை தெரிவு செய்கின்றார், அவரது வழி முறையே பலவீனமானவர்களை நாட்டுத் தலைவர்களாக்கி, தன்னை பலப்படுத்துவது இதனை அவர் மைத்திரி அரசில் சிறப்பாகச் செய்தார், இப்போது சஜித் தை ஆதரிக்கின்றார்.

சஜித் போன்றவர்களின் பலவீனத்தை இவர் தனக்கான பலமாக்க நினைக்கின்றார்,

#அரசியல்_பலப்படுத்தல்,

பலவீனமானவர்களின் அரசில் தன்னைப் பலப்படுத்தும் நகர்வை மஹிந்த தரப்பில் மேற் கொள்ள முடியாத காரணத்தால் சஜித் அரசில் அதனை நிறை வேற்றுகின்றார், சஜித் வென்றால் அவரே பிரதமர் என்று கருத்துக்களும் உள்ளன, அந்த இலக்கில் அவரது பயணம், 2025ல் நாட்டுத் தலைவராகும் இலக்கை நோக்கி வெற்றி கரமாக நகர்கின்றது, UNP யின் வாடகை வேட்பாளர் அனுபவம் அவற்கான வாய்ப்பை எதிர்காலத்தில் வழங்கலாம்.. அதே போல் சஜித்தை வேட்பாளராக்குவதில் இவரது பங்கும் அதிகமானதாகும்.

#முஸ்லிம்_அச்சுறுத்தல்

சம்பிக்க அரசியல்வாதி மட்டுமல்ல சிங்கள சமூகத்தின் புத்தி ஜீவியாகவும் தன்னை அடையாளப்படுத்துபவர், அவரால் 10 க்கு மேற்பட்ட நூல்கள் எழுதப்பட்டுள்ளன அவற்றில் பல சிறுபான்மைத் தாக்குதலாக அமைந்தாலும் இரண்டு புத்தகங்கள் முஸ்லிம்களை நேரடியாகத் தாக்குகின்றன . அதில்

1). "கிழக்கில் சிங்கள மரபுரிமைகள்,

2).அல் ஜிஹாத், அல் காய்தா,


இவை இலங்கை முஸ்லிம்களை நேரடியாகவே பயங்கரவாதிகளாக சித்தரிப்பதுடன், சர்வதேச பயங்கரவாத அமைப்புடன் இணைந்து இந் நாட்டிற்கான அச்சுறுத்தல் என கூறுகின்றன, முதல் நூல் கிழக்கில் முஸ்லிம்களை இடமற்றவர்களாக்கி, அவர்களின் இருப்பின் வேர்களையே தொல்லியல் ரீதியாக கேள்விக்குள்ளாக்குகின்றது,

#கவலையான_நிலமை,

சம்பிக்கவின் இனவாத அரசியல் பயணத்தை தடுக்கக் கூடிய பலமற்றவர்களாக முஸ்லிம் அரசியல்வாதிகள் உள்ளனர், இதனை புத்தளத்து குப்பை விவகாரத்தில் கண்டோம், மட்டுமல்ல அவரது புத்தகத்திற்கான பதில்கூட இன்னும் எவராலும் எழுதப்படவில்லை, அத்தோடு அவரது நூல்களே எதிர்கால இளம் இனவாதிகளுக்கான " #மகா_வாக்கியமாகவும் அமையப் போவதுடன், இளம் சிங்கள இளைஞர்களை முலிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடத் தூண்டும் வழிகாட்டியாகவும் உள்ளது,

#என்ன_செய்யலாம்??

2019 ஜனாதிபதித் தேர்தலில் சஜித் வென்றால் பலம் பெறப் போவது சம்பிக்கவே தவிர வேறு யாரும் இல்லை, அதனை சஜித் பல இடங்களில் உறுதிப்படுத்தியும் வருகின்றார், எனவேதான் நவம்பர் 16 ல் நாம் வழங்கப் போகும் வாக்கு, சஜித்துக்கு அல்ல சம்பிக்கவுக்கே பால் வார்க்கப் போகின்றது, குறிப்பாக கிழக்கு முஸ்லிம் நில இருப்பில் தொல் பொருளியல் என்ற உருவத்தில் பலமான அழிவை உண்டு பண்ணும்..

எனவேதான் எதிர்வரும் தேர்தலை #சம்பிக்கவைத்தோற்கடிக்கும்தேர்தலாகப் பாவிப்போம், ஒரு இனவாதியின் எதிர்கால இலக்கில் இடி விழுவதாக எம் வாக்குகள் அமையட்டும்.... சஜித் வெற்றி பெற்றால் அவரை வழிப்படுத்தப் போகும் சக்கியாக இருக்கப் போகும் ஒரே பலமான சக்தி சம்பிக்கவே,

எனவேதான் தோற்கப் போவது சஜித் மட்டுமல்ல அது சம்பிக்கவாகவும் அமையட்டும்...

- ஐக்கிய முஸ்லிம் மறுமலர்ச்சி அமைப்பு -

About Admin

0 Comments:

Post a Comment

Powered by Blogger.