Tamil

நாங்கள்தான் ஆசிரியர்கள் !!

20ம் திகதி எடுத்த சம்பளத்த அடுத்த 20ம் திகதிவரை சமாளிக்க முடியாம;
கெளரவத்த இழந்து கடனும் வாங்கிக்க முடியாம திண்டாடிக்கிட்டு;
பார்ட் டைம், ஓவர் டைம், எக்ஸ்ரா டைம், போனஸ், அலவன்ஸ் எண்டு எதுவுமே இல்லாம;
மேலதிக வருமானத்துக்கு ஒரு டியூட்டரில படிப்பிக்கலாம் என்றால்

“ஆசிரியத் தொழில் மகத்தான தொழில், அது தொழிலே இல்லை சேவை அதை வியாபாரம் ஆக்கலாமா?” என்று கூவும் அறப்படிச்சதுகளையும் சமாளிச்சிக்கிட்டு;
”உலகத்திலையே உங்களுக்குத்தானே ஏகப்பட்ட லீவு அப்புறம் என்ன?” ஏங்கிற விளங்காததுகளையும் சமாளிச்சிக்கிட்டு;

’லீவு பிள்ளைகளுக்குத்தான் ஆசிரியர்களுக்கு இல்ல. ஆசிரியர்களுக்கு லீவு உரிமை இல்லை சலுகைதான்” எங்கிற அதிகாரிகளையும் கடந்து; இன்கிரீமெண்ட், ஸ்கீம், நோட்ஸ் ஒஃப் லெசன், கணிப்பீட்டு முன்னாயத்தம், கணிப்பீட்டுப் படிவம், கணிப்பீட்டு புள்ளி, சீருடைகூப்பன் முதலான க்ளரிக்கல் வேலைகளையும் செஞ்சிட்டு; அதில் வரும் நொட்டு நொடுக்குகள சமாளிச்சிட்டு;
படிப்பிக்கலாமேனு போனா பாடாப் படத்தும் பசங்களையும் சமாளிச்சிட்டு;

தப்பு பண்ணுறவன தண்டிக்கவும் முடியாம சட்டத்தாலும் மனித உரிமையாலும் கட்டிப்போடப்பட்டு;. ஏசினாக் கூட ”மன உளைச்சலுக்கு உள்ளாக்கிட்டாரு” என்கிற என்ற சட்டப் பிரச்சினைக்கும் பயந்து மொத்த உணர்ச்சிகளையும் அடக்கிட்டு இழிச்ச வாயாவே வகுப்புகளுக்கு போய்டு வந்துட்டு;
நாம எவ்வளவுதான் கஷ்டப்பட்டு படிப்பிச்சாலும் முழுக் கிரடிட்டையும் டியூசன் மாஸ்டருக்கும் பிள்ளைகள் எக்சாம்ல சொதப்பினா ஏச்சுப் பேச்சுகளை மட்டும் பாடசாலை ஆசிரியருக்கு கொடுக்கும் பெற்றாரையும் கடந்து
வெளிய வந்தா

உங்களுக்கு இலவச Tab தாறம் மோட்டர் சைக்கிள் தாறம் எண்டு ஏமாத்திற அரசாங்கத்தையும் கவலைப்பட்டு;

இப்படி எல்லாப் பக்கத்தாலையும் நொந்து, நூடில்ஸ்ஸாகி, வெக்கப்பட்டு, வேதனைப்பட்டு, அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு கடைசில அரசாங்கத்தாலையும் ஏமாற்றப்பட்டு வாழ்க்கையைக் கடத்திட்டிருக்கும் ஆசிரியர்கள்...????.எல்லாத்தொழிற்சங்கங்களும் தமது வேதனம் போதாது என்று வருடா வருடம் வேலை நிறுத்தம் செய்யும் ,சுகயீன லீவு போராட்டம் செய்யும் அரசு காலத்திற்குக்காலம் சம்பள அதிகரிப்பு வழங்கும் .இலங்கையில் அரச துறையில் அதிகூடிய சம்பளம் பெறும் நாடாளாவிய சேவையாளர்களான அரசஆளணியினரின் சம்பளத்தையே தீர்மானிக்கும் வகுதியினரான இலங்கை நிர்வாக சேவையினரே(SLAS) பணிப்புறக்கணிப்பு செய்கின்றனர் (சம்பளப்பிரச்சனை) வைத்தியர்கள் சம்பளத்தின் இரட்டிப்புமடங்கு மேலதிகபணிக்கொடுப்பனவு பெறுபவர் உயிர்காக்கும் தொழில் செய்பவர்கள் அவர்களும் வருடா வருடம் வேலைநிறுத்தம்செய்கின்றனர்.

புகையிரதஊழியர்கள்..தாதியர்கள்,  தபால் சேவை ....தொடர்கின்றது அதிகரிக்கின்றது இவர் அனைவரும் மாதம் 80000.00.மேல் சம்பளம் எடுப்பவர்கள் ஆயினும் எங்கள் தொழிற்சங்கங்களில் ஒற்றுமை இன்மைஒருபுறம், பணிப்புறக்கணித்தால் வேலைபோய்விடும் என்ற சேவக மனநிலையில் கொஞ்சம், பிரதீபாபிரபாவிற்காக கொஞ்சம் ,ஆசிரியத்தொழிலை பகுதிநேரத்தொழிலாக செய்யும் மனநிலையில் கொஞ்சம்,அதிபரை அதிகாரிகளை மனநோகச்செய்யப்படாது என்று கொஞ்சம்,எதிலும் நம்பிக்கையற்ற கொஞ்சம் எல்லாம் சேர்ந்து ......

இன்றுவரை சம்பளத்தில் கொஞ்சம் சீனி ,கொஞ்சம் மா, கொஞ்சம் அரிசி ,கொஞ்ச வாழ்க்கை வாழ்ந்து விட்டு இறந்து போகின்றனர் ஆசிரியர்கள். ஆசியாவின் ஆச்சரியம் உலகிலேயே ஆகக்குறைந்த வேதனம் பெறும் அரசசிற்றூழியர்கள் இலங்கைஆசிரியர்கள்???????"

இதில Med,MA புலம்பல்......

About Admin

0 Comments:

Post a Comment

Powered by Blogger.