Articles

சூர சரதியல்-SOORA SARADIYEL-Robinhood of Ceylon

இரண்டு ஆங்கில வசனங்களுக்கு இடையில் கமா (,) தவராகப் பதியப்பட்ட இங்கிலாந்து இளவரசியின் கடித்ததால் தூக்குக் கயிறை சந்தித்த இலங்கையின் சூர-சரதியல்.Sura Saradiel's lifelong friend Mammale Marikkar after taken into Custody in 1864.

இலங்கையில் மாவனல்லை என்ற பிரதேசத்தின் "உத்துவான்கந்தே" என்ற ஒரு மலைப்பாங்கில் ஒளிந்து துப்பாக்கி முனையில் வழிப்பறிக் கொள்ளைகள் அடித்து அதனை "ராபின் ஹூட்" பாணியில் ஏழை எளியோருக்கு கொடுத்து அன்றை பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பின் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட்ட, பிரிட்டிஷ் (இலங்கை) அரசினால் தேடுதல் வேட்டைக்கு உட்பட்ட ஒருவரே "சூர சரதியல்" என்பவர்.

"சூர சரதியல்" என்ற இவருக்கு எதிரிகளின் துப்பாக்கி ரவைகள் பாயாது, காரணம் அவரிடத்தில் அதற்கான கவசமாக அவரது கையில் "யந்த்ர" என்ற நூலின் மந்திர சக்தி இருந்ததாகவும் நம்பப்பட்டு வந்தது.

நடகோட்டி செட்டியார் என்ற அன்றைய கால பெருஞ் செல்வந்தரைக் கொன்று அவருடைய பொருட்களைச் சூறையாடிய சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு குற்றத்தை நிரூபிக்க தகுந்த சாட்சிகளின்றி விடுவிக்கப்பட்டார்.

பிறகு பல கொள்ளைகளுக்கு ஆளாகி "சூர சரதியல்" என்ற இந்த கொள்ளைக் கோஷ்டியின் தலைவருக்கு மாத்திரமல்லாமல், மாமலே மரிக்கார், மஹம்முது ஸவாத், நசார்டீன், சிறிமல, உக்கிந்த, மோதர தன்னே ஹெண்ட, போன்ற அவரது சகாக்களுக்கும் எதிராக பிடியாணை ஒன்றை அறிவிப்பு செய்தது.

இலங்கை-பிரிட்டிஷ் அரசிற்கு "சூரசதியலை" காட்டிக் கொடுப்பவர்களுக்கு சன்மானமாக இருநூறு பவுன்சுகள் வழங்கப்படும் என்று 1864 ஆம் ஆண்டு ஜனவரி 13 ம் திகதி Arrest Warrant Reward Notice (Ceylon Gazette 13th Jan 1864) அறிவித்தலும் கொடுக்கப்பட்டது.மாவனல்லையில் வசிப்பது தனக்கு ஆபத்தானது என்பதை உணர்ந்த சூரசரதியல், சிலாபம் என்ற ஊரில் தனது தகப்பனார் வீட்டிற்கு சென்று அங்கே அடைக்கலம் தேடலாம் என்று சென்றாலும் அவருடைய தந்தை அடைக்கலம் கொடுக்காமல் துரத்திவிட்டார்.

மறுபடியும் உத்துவான்கந்தே என்ற மலையில் ஒளிந்து தலைமறைவாகி வாழ்ந்த இவர் நீர்கொழும்பில் வைத்து கைதுசெய்யப்பட்டு கொழும்பு ஹல்ஸ்டொர்ப் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் மஹர சிறையில் அடைக்கப்பட்டார்.

அதிலிருந்தும் (சிறையில்) தப்பித்து மறுபடியும் மாவனல்லை உத்துவான்கந்தே என்ற மலையில் மறைந்து அங்கேயுள்ளவர்களது உதவியுடன் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட்டு அவரது பிரதேசத்தை, எல்லையை சன்னஞ் சன்னமாக விரிவுபடுத்தினார்.

அரசாங்கத் தரப்பில் இராணுவம் அப்பிரதேசத்தில் குவிக்கப்பட்டது.

சூர சரதியலின் உதவியால் கவரப்பட்ட மக்கள், வெள்ளையனின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக களமிறங்கிய மாவீரனாக இவரை ஒரு ஹீரோவாக என்னியிருந்தனர்.

சூரசரதியல் தன்னுடைய தாயாரை சந்திக்க மாத்தளை என்ற ஊருக்கு சென்றிருந்த வேளையில் அவரது குடும்ப உறவொன்றின் துப்பு அதிகாரிகளுக்கு கிடைத்து அதைத்தொடர்நது அங்கே சென்ற முஸ்லீம் போலீஸ் கான்ஸ்டபில் "சபான்" என்பவர் சூரசரதியலை சுட, பதிலுக்கு சூரசரதியலின் நண்பராக அவருக்கு பாதுகாப்பாக இருந்த முஸ்லீம் ஒருவரான "மாமலே மரைக்காயர்" துப்பாக்கியால் பதில் தாக்குதல் நடாத்த, முஸ்லீம் போலீஸ் கான்ஸ்டபில் சபான் அங்கே கொல்லப்பட்டார்.போலீஸ் கான்ஸ்டபிள் கொல்லப்பட்ட தினத்தைதான் இன்று இலங்கையில் போலீஸ் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.இங்கே முக்கியமாக அவதானிக்க வேண்டிய அம்சம் என்னவெனில், தொன்றுதொட்டு இலங்கை முஸ்லிம்கள் இலங்கை அரசாங்கத்திற்கு உறுதுணையாக பல்வேறு ரீதியிலும் பாடுபட்டுள்ளனர்.

அந்த இடத்திற்கு விரைந்த போலிஸ் படையினரால் சூர சரதியலும் அவனது நண்பர் மாமலே மரைக்காயரும் கைது செய்யப்பட்டு பிறகு இருவரையும் ஆங்கிலேய அரசு நீதவான் தூக்கிலிடுமாறு நீதிமன்ற உத்தரவாக ஆணை பிறப்பித்தது.

சூர-சரதியலின் ஆதரவாளர்கள் பார்வையாளர்கள் குவிந்துநிற்க அவர்களுக்கு சூர-சரதியலின் இறுதி உரைநிகழ்த்திய பின் அங்கே 1864ம் ஆண்டு மே 7 ம் திகதியன்று இருவரும் தூக்கிலப்பட்டு கொல்லப்பட்டனர்.

Constable Sabhan Memorial Mawanella.

இங்கிலாந்து இளவரசியின் கடிதம் தவறாகப் புரியப்பட்டே சூர-சரதியல் கொல்லப்பட்டுள்ளார் என்பது சிலநாட்கள் கழித்தபின் தெரிய வந்தது.

அதாவது இரண்டு வசனங்களுக்கு நடுவே உள்ள "கமா" (,) என்ற குறியீடு தவறான இடத்தில் போடப்பட்டுள்ளதை புரிந்து கொண்டனர்.

அதாவது 'kill him not, let him go'. "அவரைக் கொள்ள வேண்டாம், விடுவித்து விடுங்கள்" என்பதற்குப் பதிலாக, 'kill him, not let him go', "அவரை கொன்று விடுங்கள், விடுவித்து விடாது" என்ற அர்த்தத்தை அது கொடுத்ததால் தூக்கிலிட்டுக் கொன்றனர் என்பது தெரிய வந்தது. இது எழுத்தர்கள் செய்த தவராகவும் இருக்கலாம்.

ஆங்கிலத்தில் அதனை பின்வருமாறு விவரிக்கின்றனர்.

'kill him, not let him go', when it was supposed to be: 'kill him not, let him go'.

வசன ஒழுங்கின் குறியீட்டு அடையாளத்தில் எதை எங்கே வைக்க வேண்டுமோ? அதை அங்கே வைக்காததால் எத்தனை விளைவுகள்?

About Admin

0 Comments:

Post a Comment

Powered by Blogger.