நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்று, ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
தேர்தல்கள் செயலகத்தில் சற்று முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ 6,924,255 (52.25%) வாக்குகளை பெற்றுக் கொண்டு 1.4 மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றியை ஈட்டியுள்ளார் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment