Articles

இந்த வெற்றியின் காரணகர்த்தாக்கள் பெரும்பான்மையினரே..!

"இந்த வெற்றியின் காரணகர்த்
தாக்கள் பெரும்பான்மை சிங்கள
வர்கள் தான் என்பதை நாங்கள்
ஆரம்பம் முதலே அறிந்திருந்தோம்.

சிங்கள மக்களின் ஆதரவில்
மட்டும்,வெற்றி பெற்று ஜனாதிபதி ஆகிவிடலாம் என்று நான் தெரிந்து
வைத்திருந்த போதிலும்,
தமிழ் முஸ்லிம் மக்களிடம் நான்
ஒரு முக்கிய வேண்டுகோள்
விடுத்தேன்.
இந்த வெற்றியில்
நீங்களும் பங்காளர்கள் ஆகுங்கள்
என்று ஆனால் நாம் எதிர்பார்த்த
அளவு(சமிஞ்சை)ஆதரவு கிடைக்க
வில்லை.இருந்தும் நான் உங்களது
புதிய ஜனாதிபதி என்ற வகையில்
மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்,
எதிர்கால வளர்ச்சிக்காக(நலனுக்காக)
உண்மையான இலங்கையர்களாக
என்னோடு ஒன்றிணையுங்கள்.

எனக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

*(இலங்கையின் புதிய ஜனாதிபதி-
நந்தசேன கோட்டாபாய ராஜபக்ச).

ஜனாதிபதியின் பேச்சையும்  வாக்களிக்கப்பட்ட விதத்தை காட்டியுள்ள(கீழே தரப்பட்டுள்ள)
வரைபடத்தையும் கவனியுங்கள்.
முஸ்லிம்களும்,தமிழர்களும் வாழும்
வடக்கு,கிழக்கு பிரதேசங்
களிலும்,முஸ்லிம்கள் சிங்களவர்க
ளுடன் இணைந்து வாழும் பிரதேசங்க
ளிலும் புதிய ஜனாதிபதியை
சிறுபான்மை  மக்கள் புறக்கணித்து,
சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களித்தி
ருப்பது புரியும்.அவரும் ஒரு பக்தர்
தான்.

மஹிந்த ராஜபக்சவின் பத்து
வருட ஆட்சியில்,சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான அடக்கு முறைகளில்,"கோடாபே"பெயரே
கூடுதலாக பேசப்பட்டது.அதனால்
அவர் பெரும்பான்மைச் சிங்களவர்க
ளுக்குள் ஹீரோவானார்.பௌத்தத்தை
காக்க வந்த தலைவர்களாகவே
அவரது குடும்பம் கணிக்கப்பட்டது.
இந்த இனவாத சிந்தனை இன்று
நாட்டில் வெற்றி பெற்றிருக்கிறது.
அதற்கு முஸ்லிம் பெயர் தாங்கிகளால்
நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்
பெரிதும் துணைபுரிந்திருக்கிறது.

மஹிந்தவின் ஆட்சி முறையில்
சலிப்புற்ற சிங்களவர்களோடி
ணைந்து சிறுபான்மைச் சமூகங்கள்,
2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தைச்
செய்தது.ஆட்சிக்கு வந்த மைத்திரியும்
சொதப்பியதால்,விரக்தி அடைந்திருந்த
மக்களிடம் இனவாதம் வளர்க்க,
ஏப்ரல் குண்டுத்தாக்குதல் அதிமுக்கிய காரணியாக அமைந்தது.

சிறுபான்மை சமூகங்கள் ஒரு
பக்கமாகவும்,பெரும்பான்மை
இனமான பௌத்தர்களில் பெரும்
பாலானோர் ஒரு பக்கமாகவும்
பிரிந்து நின்று அரசியல் செய்யும்
அளவுக்கு இனவாதம் வேரூன்றி
போயுள்ளதையே தேர்தல் முடிவு
சொல்லி நிற்கிறது.என்றாலும்
புதிய ஜனாதிபதிக்கு கிடைத்த
வாக்குகளில் 10% மானவை
சிறுபான்மைச் சமூகத்தினுடையது.
எனினும் அவர் அதை பொருட்
படுத்தவில்லை.

அடக்குமுறைகள் தொடருமா ?
அல்லது இலக்கை அடைந்துவிட்ட திருப்தியில்,சிறுபான்மை சமூகங்
களை தன் பக்கம் ஈர்க்கும்
பணிகளில் ஈடுபடுவாரா ?.
பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

நன்றி: நப்ஹான் ஷிஹாப்தீன் ()

About Admin

0 Comments:

Post a Comment

Powered by Blogger.