Articles

முஸ்லிம் நாடுகளுக்கு தெரிந்த உண்மைகூட நமது முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு தெரியாமல் போனது ஏன்..?


புரிந்து  கொள்ளுமா  நமது  சமூகம்..?
நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களை சந்தித்த மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்கள் இலங்கைக்கு அனைத்து வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்க தயாரென்று தெரிவித்துள்ளனர். இதன் மூலம் முஸ்லிம் நாடுகள் என்றும் பயங்கரவாதத்தை அடக்கி நாட்டில் மீண்டுமொரு சுதந்திரத்தை ஏற்படுத்திய மஹிந்தவின் பின்னால் நாங்கள் நிற்போம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

புரையோடிப்போயிருந்த யுத்தத்தினால் தமிழ் மக்கள் மட்டுமல்ல முஸ்லிம் மக்களும் அவ்வப்போது உயிர் உடமைகள் ரீதியாக பாதிக்கப்படுவதை கண்டு கவலையடைந்திருந்த முஸ்லிம் நாடுகள், எந்த தலைவனாவது இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வரமாட்டார்களா என்று ஏங்கிய நேரத்தில் அதற்கு முன்வந்தவர்தான் இந்த மஹிந்த ராஜபக்ஸ என்பதை இந்த நாடுகள் அறிந்தே வைத்திருந்தன. அதனால்தான் யுத்தம் முடிந்ததன் பின் ஐ.நாவின் மனித உரிமை பேரவையில் மஹிந்த அரசாங்கத்துக்கு எதிராக மேற்குலகத்தினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு எதிராக அத்தனை முஸ்லிம் நாடுகளும் எதிர்த்து வாக்களித்து தங்களது உறுதியான ஆதரவை தெரிவித்திருந்ததன் காரணமாக 2009ம் ஆண்டு நான்கு வாக்குகளினால் பிரேரண தோற்கடிக்கப்பட்டிருந்தது. 


இதில் ஆச்சரியம் என்னவென்றால் அரெிக்காவினால் மீட்டுக்கொடுக்கப்பட்ட குவைத் என்ற நாடுகூட அமெரிக்காவை எதிர்த்தே வாக்களித்திருந்தது என்பதுதான். 

இப்படியான செயல்பாடுகள் குறிப்பாக டயஸ்போராக்களுக்கும், மேற்குலகத்துக்கும் சற்று எரிச்சலையே ஏற்படுத்தியிருந்தது.


 அதற்காகவே மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தை இலங்கை முஸ்லிம்கள் வெறுக்கவேண்டும், அதனூடாக முஸ்லிம் நாடுகளையும் இக்கட்டான நிலைக்கு தள்ளவேண்டும், என்பதற்கான அனைத்து ரகசய திட்டங்களையும் நிறைவேற்ற திட்டம் தீட்டி செயல்பட நினைத்தார்கள். அதற்காகவே அளுத்கம போன்ற பிரச்சினைகளை திட்டமிட்டு ஏற்படுத்தி அதனை அவர்களின் மீடியா பலத்தை பயன்படுத்தி உலகம் பூராவும் பரப்பினார்கள். 


அந்த திட்டம் அவர்களுக்கு இலங்கை முஸ்லிம்களை மனக்குழப்பமடைய வைத்து மஹிந்தவுக்கு எதிரான அலையை உண்டாக்க உதவியது என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. 


ஆனால் இந்த சூழ்ச்சியின் உண்மைத்தண்மையை அறிந்த முஸ்லிம் நாடுகள் அமைதியாகவே இருந்துவிட்டன என்பதே உண்மை. காரணம் இதற்கு எதிரான பிரசாரத்தை இலங்கையில் மேற்கொள்ள இங்கேயுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் தயாரில்லாத நிலைதான் அதற்கு காரணமாகும்.  

இந்த நிலையில்தான் 2015ம் ஆண்டு மேற்குலகத்தின் ஆசீர்வாதத்துடன் மஹிந்த அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டிருந்தது என்பதை நாம் அறிவோம். சதிதிட்டத்தின் மூலம் ஆட்சியை கைப்பற்றி ரணில் அரசாங்கம் முஸ்லிம் நாடுகளை புறக்கணித்து மேற்குலக நாடுகளின் அஜண்டாவுக்கே முக்கியத்துவம் கொடுத்து இயங்கத்துவங்கியது. 


அதற்கான கைமாறாக கடைசியாக நடந்த ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை குறிப்பிடலாம். அந்தளவு இலங்கையின் நிலை மிகவும் வழுவற்றுக்காணப்பட்டது. அதன் காரணமாக அமெராக்காவின் ஏஜண்டுகள் இலங்ககைக்குள் எவ்வித சோதனைகளும் இன்றி உள்ளே வரலாம் என்ற நிலையும் ஏற்பட்டிருந்தது. கடைசியாக அமெரிக்காவுக்கு நாட்டை தாரைவார்க்கும் ஒப்பந்தமும் செய்ய துணிந்திருந்தார்கள். இதுதான் ரணில் அரசாங்கம் மேற்குலகத்துக்கு செய்ய நினைத்த பிரதியுபகாரம் என்பதை நாம் அறிவோம். இதன் மூலம் இலங்கை நாட்டில் முஸ்லிம் சமூகம் மட்டுமல்ல எந்த சமூகமும் நிம்மதியாக வாழ முடிந்திருக்குமா என்பதே கேள்விக்குறியாகும்.

இந்த நிலைமைகளை கருத்திக்கொண்டு செயல்பட நமது உள்ளூர் முஸ்லிம் அரசியல்வாதிகள் தயாரில்லாத நிலையிலேயே காணப்பட்டார்கள். அவர்களது இலக்குகள் எல்லாம் முஸ்லிம் சமூகத்தைப்பற்றியதல்ல, மாறாக தங்களுடையதும், தங்களை காப்பாற்றும் கட்சியினதும் பாதுகாப்பே அவர்களுக்கு முக்கியமாகபட்டது, அதனால் பணம் பதவி இதற சுகங்கள் என்பதற்கு அடிமைப்பட்டு முஸ்லிம் சமூகத்தின் நீண்டநாள் பாதுகாப்பை சிந்திக்க அவர்கள் தவறிவிட்டனர் என்பது முஸ்லிம் நாடுகளுக்கு தெரிந்தே இருந்தன.

இப்போது மீண்டும் மஹிந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்துவிட்டதை சந்தோசமாக ஏற்றுக்கொண்ட முஸ்லிம் நாடுகள் மஹிந்த அரசாங்கத்துக்கு சகல வழிகளிலும் உதவத் தயார் என்று அறிவித்துள்ளதானது, அவர்களின் இலங்கை முஸ்லிம்களின் மீது கொண்ட பாசத்தின் காரணமாகவே என்பதை யாரும் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது. இருந்தாலும் நமது முஸ்லிம் அரசயல்வாதிகளுக்கு இந்த உண்மைகள் புரிவதற்கு நியாயமில்லைதான் காரணம் அவர்களுக்கு தேவை பணம் பதவி இதர சுகங்கள்தானே தவிர வேறொன்றும் கிடையாது. அதனால்தான் மஹிந்த அரசாங்கம்கூட இப்படிப்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகளை தங்களோடு இணைத்துக் கொள்ள தயங்குகின்றார்கள் என்பதே உண்மை. இப்படிப்பட்டவர்களை கடந்த காலங்களில் இணைத்து செயல்பட்ட மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்துக்கு இவர்கள் துரோகம்தான் செய்தார்களேயொழிய நண்மைகள் எதனையும் செய்யவில்லை என்பதுதான் உண்மை, எந்தப்பக்கம் பணம் பதவிகள் கிடைக்கின்றதோ அந்தப்பக்கம் வெல்டி அடிப்பதற்கு தயங்காத கொள்கைகள் அற்ற இந்த முஸ்லிம் அரசியல்வாதிகளை இணைத்துக் கொள்வதைவிட, நாட்டின் மீதும், தன் இனத்தின் மீதும் அதேநேரம் பணத்தின் மீதும் அடிமையாகாத முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக்கொள்ளவே அவர்கள் விரும்புகின்றார்கள்.

ஆகவே முஸ்லிம் சமூகம் உண்மைகளை புரிந்து செயல்பட முன்வரவேண்டும். முஸ்லிம் நாடுகள் உண்மையின் பக்கமே நிற்கின்றது என்பதை புரிந்து செயல்பட்டால் நமது சமூகத்துக்கு கோடிநண்மைகள் கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் கொள்ளத்தேவையில்லை. இப்படியான விடயங்களை இல்லாமல் செய்வதற்கே டயஸ்போராக்களும், மேற்குலகமும் சதி செய்து செயல்படுகின்றன என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் புரிந்துகொள்ள தவறக்கூடாது என்பதே நாங்கள் கூறும் கருத்தாகும்..!

எம்எச்எம்.இப்றாஹிம்
கல்முனை..

About Admin

0 Comments:

Post a Comment

Powered by Blogger.