Articles

SLMC மற்றும் ACMC ஆகியவை எனது வளர்ச்சியை தடுத்தன - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்

வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் Hunais Farook LLB அவர்களுடன் ஒர் ஊடக கலந்துரையாடல்;
கடந்த 2015 ஜனாதிபதி தேர்தலில் முதன்மையானவராக எல்லோருக்கும் முதலில் சுயாதீனமாக முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பிரதமர் கெளரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இணைப்பில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியின் பிணைப்புடன் சேர்ந்து கொண்ட முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ஹுனைஸ் பாரூக் அவர்கள் எம்மோடு பகிர்ந்து கொண்ட சில முக்கிய கருத்துக்களை இக் கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறோம்.

நான் 2015ல் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் முன்பாக ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அப்போது எனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி வழங்கப்படும் என வாக்களிக்கப் பட்டது. ஆனால் அதன் பின்னர் இறுதியில் நல்லாட்சி அரசுக்கு ஆதரவாக களம் இறங்கிய ACMC கட்சி ரிஷாத் பதியுத்தீன் மற்றும் SLMC கட்சி  ரவூப் ஹக்கீம் ஆகியோரின் வருகையால் நான் ஏமாற்றப் பட்டேன்.

தனது தியாகத்தின் பெறுமானம் இல்லாமல் ஆக்கப் பட்டதுடன் ரிஷாத் பதியுத்தீன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் எனது அரசியல் வளர்ச்சியை தடுத்தனர் என்று கூறினார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் அவர்கள் மைத்திரி பால சிறிசேன அவர்களுக்கு ஆதரவாக நல்லாட்சி அரசுடன் இணையும் போது ஹுனைஸ் பாரூக் ஆகிய எனக்கு எந்த பதவியும் வழங்கப்பட கூடாது என்று நிபந்தனை இட்டார் என்பதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது என்றார்.

SLMC ஐப் பொறுத்த வரை மக்களின் தனிப்பட்ட அபிவிருத்தி மற்றும் மக்களின் தேவைகளை சுதந்திரமாக நிறைவேற்றி வைக்கும் சந்தர்ப்பம் அக் கட்சியில் இல்லை என்று கூறினார்.

வன்னியில் தனது சமூகப் பற்று, சேவைமனப்பாங்கு, தியாகம் என்பன இன்னும் சமூகமயப்படாமல் இருப்பது ஒரு பெரும் குறையாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

1- தனிப்பட்ட இலாபங்களை கருத்தில் கொண்டு அரசியல் செய்வது கூடாது. 
2- தற்போதைய நிலையில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை எவ்வாறு அதிகரிக்கலாம் என்று பொறுப்புள்ள வர்கள் சிந்திக்க வேண்டும்.
3- நாம் பேரம் பேசும் சக்தியாக இருப்பதுவே எமது பலம். 
4-அமைச்சரவை தீர்மானங்களின் போது எமது பங்களிப்பு இல்லாமல் இருப்பது ஒரு குறை எனவும் தமது ஆதங்கத்தை தெரிவித்தார்.

அத்தோடு அரசியல் அங்கிகாரம், அரசியல் அதிகாரம் ஆகிய இரண்டும் சமூக சேவைக்கு அவசியம் என்று கூறியதுடன் இறுதியாக, முஸ்லிம் கட்சிகள் இனியும் தனித்து நிற்காமல் இணைந்து செயல்படுவது காலத்தின் தேவை என்று கூறியதுடன் பெரும் பான்மை கட்சிகளுடன் இணைந்து தமது அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதே மிகவும் பொருத்தமானது என்றும் கருத்து தெரிவித்தார்.

2019-12-08
www.pmnosrilanka.com  

About Admin

0 Comments:

Post a Comment

Powered by Blogger.