மஹிந்த அரசில் எப்போதுமே திருப்திப்படாத கூட்டம் முஸ்லிம்களுள் அதிகம் பேர் உள்ளனர். அவர்கள் ஜனாதிபதி கோட்டா அரசாங்கம் நன்றாக செயற்பட்டுக்கொண்டிருப்பதையும் கோட்டாவை எதிர்த்தவனும் இப்படியொரு தலைவரா என மூக்கில் கை வைப்பதையும் பார்த்து சொல்கிறார்கள்;அடுத்த தேர்தலின் எப்படி இருக்குமோ என.
இவர்களால் கோட்டா அரசின் நல்ல விடயங்களை ஜீரணிக்க முடியவில்லை. இப்ப நல்லம் இனி நல்லாயிருக்காது என சொல்லி திருப்திப்படுகின்றனர். இதைத்தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த காலத்தில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஒரு சந்திப்பில் மஹிந்த சொன்னார் நான் முஸ்லிம்களுக்கு தங்கத்தை கொட்டிக்கொடுத்தாலும் அவர்கள் எனக்கு புரியாணி தருவார்கள்; ஓட்டு தரமாட்டார்கள் என. காரணம் முஸ்லிம் சமூகம் இன்னமும் அரசியல் விடயத்தில் அறிவால் சிந்திக்காமல் உணர்வாலும், ஊர் ஓட அதன் பின்னால் ஓடுபவர்களாகவுமே இருக்கின்றனர்.
அடுத்த தேர்தலுக்கு பின்னரும் இதே அரசு இதைவிட நன்றாக இருக்கும் என்ற நல்லெண்ணம் வைப்போம். நாம் மஹிந்த அரசை நம்பினால்த்தான் அவர்களும் நம்மை நம்புவார்கள். இனியாவது மாற முயற்சியுங்கள்.
- முபாறக் அப்துல் மஜீத்
0 Comments:
Post a Comment