உலகம் நவின பாதையில் சென்றுகொண்டு இருக்கும் போது அதற்கேற்ப மாணவ சமூகம் இளைஞர் சமூகம் என்பன ஒன்றினைந்து செல்லவேண்டிய சூழ்நிலையை அரசியல்வாதிகள் புத்திஜிவிகள் ஆகியோர் ஏற்படுத்த வேண்டிய தார்மீக கடைப்பாடு உள்ளது என்பதை புரிந்துகொண்ட கண்டி கம்பளை எலமல்தெனிய அல் ஹாஜ் ஏ.எல்.எம் பாரிஸ் அவர்கள் கண்டி மண்ணின் கல்வித்துறை மற்றும் விளையாட்டுத்துறையை முன்னேற்ற முன் வந்திருப்பதை பாராட்ட வேண்டும்.
அதாவது கண்டி மண்ணில் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் இருக்கும் விளையாட்டு மைதானங்கள், பாடசாலைகள், பாடசாலை உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள், அலுவலக உபகரணங்கள், விளையாட்டு கழகங்கள் என அனைத்தையும் கவனத்தில் கொண்டு தன்னால் முடியுமான உதவிகளை தனது சுய மூலதனத்தால் செய்து வருகின்றார்.
தற்பொழுது திரு எ.எல்.எம் பாரிஸ் அவர்களிடம் கண்டி மக்கள் மேற்கொள்ளும் கோரிக்கைகளை இன மத பேதம் பார்க்காமல் இன்ப முகத்துடன் ஏற்றுக்கொள்கின்றார்.
சில நேரங்களில் பணத்தால் செய்ய முடியாத சமூகம் சார்ந்த சேவைகளை தனக்கு இருக்கும் சமூக அங்கீகாரம் மற்றும் ஆளுமையினினால் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்கிறார்.
இவருடன் நெருங்கி பழகும் எவரும் அவரது சேவைகளை கண்கூடாக கண்டுகொள்வார்கள்.
திரு ஏ.எல்.எம் பாரிஸ் எப்போதும் சமூக ஒற்றுமை, கல்வி அபிவிருத்தி, சமூக அபிவிருத்தி, சிறுவர் கல்வி, மாணவர்கள் திறமை என்பன தொடர்பாகவே அதிகமாக பேசுவார்கள்!
அது மட்டுமல்லாமல் அரசியல் அதிகாரம் இல்லை என்றாலும் தன்னால் முடியுமான உதவிகளை மக்களுக்கு செய்ய வேண்டும் என்று ஆவலுடன் இருக்கிறார்கள்.
அவர்களின் சமூக மனிதநேய செயல்பாடுகளை இளைஞர் சமூகம் மட்டுமல்ல பொது மக்களும் இப்போது கண்டி மாவட்டம் முழுவதும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
இவரது கொடைகள் இலைமறை காயாக இருந்தாலும் இறைவனுக்கு மட்டும் தெரிந்து இருப்பதை அரபு மத்ரஸாக்களின் உஸ்தாத் மார்கள் நன்கு அறிவார்கள்.
இப்படி விரைவாக பாரிஸ் ஹாஜியார் அவர்கள் செய்து தருவார் என்று நாங்கள் நினைக்கவில்லை இப்படியானவரே எமக்கு தேவையான அரசியல்வாதி அதனால் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் பொது ஜன பெரமுன வேற்பாளராக போட்டியிடும் கண்டி மண்ணின் மைந்தன் ஏ.எல்.எம் பாரிஸ் அவர்களுக்கு அதிக வாக்கை பெற்றுக்கொடுத்து பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்ய வேண்டும் என ஆவேசமாக பேசிக்கொண்டனர்.
இது சகல இன மக்களும் கூறும் வார்த்தைகளாக இருக்கிறது.
M.H.Mohamed Rizvi
rizvimuh@gmail.com
0 Comments:
Post a Comment